என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாசன வசதி"
- மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
- காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.
பூதலூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .
நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.
திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கும் இன்று முதல் 55 நாட்களுக்கு பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
- மெணசி, பூதநத்தம் மற்றும் ஜம்மனஹள்ளி ஆகிய 17 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கும் இன்று முதல் 55 நாட்களுக்கு பாசனத்திற்காக பொது ப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) உதவி செயற் பொறியாளர் ஆறுமுகம் தண்ணீர் நேற்று திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு (பசலி 1432) பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 8550.00 ஏக்கள் நிலங்களும்,
பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 1967.00 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதியான வலதுபுற மற்றும் இடதுபுற கால்வாயிகளில் இன்று முதல் நான்கு நனைப்புகளுக்கு தண்ணீர் விடவும் முதல் நனைப்பிற்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும்,
2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 2 வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும், 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 3 வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும், 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 4வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் 2 வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 55 நாட்களுக்குப் பிறகு மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
இதனால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், அலமேலுபுரம், தென்கரைக்கோட்டை, பறைய ப்பட்டி, மோளை யானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெ ட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம் மற்றும் ஜம்மனஹள்ளி ஆகிய 17 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும், விவசாய மக்கள் பொதுப் பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கமான பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் கிருபா, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி, பாசன சங்க பிரதிநிதிகள் குமரன், மரு.பழனிசாமி, தங்கராஜ், மணிக்கம், நாடேசகவுண்டர், அப்துல், சாகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக ஒரே ஆண்டில் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக இப்பகுதி பாசன வசதிக்காக சாத்தியார் அணையிலிருந்து 11 கிராம கண்மாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகவும் சாத்தியார் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சுமார் 260 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் தொடர் கனமழை பெய்தால் சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி மீண்டும் மறுகால் பாயும் வாய்ப்புள்ளது.
இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
- மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய வடிகால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு விளங்கி வருகிறது. மேலும், சுள்ளான் ஆறு மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுள்ளான் ஆற்றில் பாலூர், சந்திராபாடி, புரசக்குடி, வேம்பகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கருப்பூர், சோலைபூஞ்சேரி, மேலசெம்மங்குடி, மட்டையாண்திடல், கோவிலாம்பூண்டி உள்பட பல கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன.
பாலூரில் இருந்து ஆவூர் வரையில் சுள்ளான் ஆறு முழுவதையும் ஆகாயதாமரைச்செடிகள் மற்றும் வெங்காய செடிகள் பெருமளவில் மண்டியநிலையில் காணப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.
அதனால் விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பொதுப்பணிதுறையினர் அவ்வப்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடி, அகரமாங்குடி பகுதியில் மண்டியுள்ள ஆகாயதாமரைச் செடிகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்த வருடமும் அதே பகுதியில் ஆகாயதாமரை செடிகள் மண்டி விடும்.
இந்தாண்டு கடந்த மாதம் சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து தூர்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் சுள்ளான் ஆறு தூர்வாரும் பணி முடிவடையாமல் மட்டையாண்திடல் வரையில் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு திறந்து விடுவது தாமதம் ஆகி வருகிறது.
மேலும் மேட்டூர் அணையும் திறக்கப்பட்டு பருவமழையும் தொடங்க உள்ளதால் சுள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்